Sunday, July 19, 2020

CRICKET

பதினாறாம் நூற்றாண்டு முதல் இன்று வரை கிரிக்கெட் விளையாட்டு எல்லாரும் அறிந்த வரலாற்றுப் பாதையைக் கொண்டுள்ளது. 1844 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தாலும், கிரிக்கெட்டின் அங்கீகரிக்கப்பட்டுள்ள வரலாறு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்ட ஆண்டிலிருந்து தான் அதாவது 1877 ஆம் ஆண்டில் தான் துவங்கியது. இந்த காலகட்டங்களில் இங்கிலாந்தில் மட்டும் விளையாடப்பட்டு வந்த ஆட்டம் தற்போது, தொழில்ரீதியில் காமன்வெல்த் நாடுகள் எங்கும் விளையாடப்பட்டு வருகின்றது.
கிரிக்கெட் எங்கு ஆரம்பித்தது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை.இது யாராலும் அறியப்படாத ஒரு உண்மை ஆகும். கிரிக்கெட் எப்படி தோன்றியது என்பதற்கு எந்த வித பலமான ஆதாரமும் இல்லை.என்றாலும், இந்த விளையாட்டு சாக்சன் அல்லது நார்மன் காலத்தில், வேல்ட் என்ற அடர்ந்த காடுகள் மற்றும் சம வெளிகளில் (இங்கிலாந்துக்கு தென் மேற்கு பகுதி மற்றும்கென்ட், சயாதுக்சுக்கு அருகில்) வாழ்ந்த சிறுவர்களால் விளையாடப்பட்டு வந்தது என்று கூறப்படுகிறது. இடைக்காலங்களில் வேல்ட் பகுதியின் மக்கள் சிறு வேளாண்மைத் தொழிலிலும், உலோகப் பொருட்களை கொண்டு வேலை செய்யும் தொழிலிலும் ஈடுபட்டிருந்தனர். பதினேழாம் நூற்றாண்டுவரை பெரிதும் குழந்தைகள் விளையாட்டாக இருந்து வந்த கிரிக்கெட், இந்த நூற்றாண்டில் பெரியவர்களாலும் விளையாடப்பட்டது.[1].
குழந்தைகளால் கண்டுபிடிக்கப்பட்ட கிர்க்கெட் விளையாட்டு, பல தலைமுறைகளுக்கு அவ்வாறே இருந்து வந்தது. 17 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் பெரியவர்கள் இந்த ஆட்டத்தை ஆடினார்கள் என்று நம்மால் கேள்விப்பட முடியவில்லை. பவுல்ஸ் மிக பழமை வாய்ந்த ஆட்டம் என்பதால், கிரிக்கெட் பவுல்சில் இருந்து பிறந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. ஒரு பந்து அதன் இலக்கை அடைவதற்கு முன்னர் மட்டையை வைத்திருக்கும் ஒருவன் அதனை தடுத்து இலக்கில் இருந்து தள்ளிப்போகும் அளவுக்கு அந்த பந்தை இந்த ஆட்டத்தில் அடிக்கவேண்டும். ஆடு மேயும் இடங்களிலும், சம வெளிகளிலும் விளையாடப்பட்டு வந்த இந்த ஆட்டம், ஆரம்பத்தில் செம்மறி ஆட்டிலிருந்து எடுக்கப்பட்ட கம்பிளி உருண்டைகளை பந்தாகக் கொண்டும், (அல்லது ஒரு கல் அல்லது இரு சிறிய மரத்துண்டு); ஓர் குச்சி அல்லது ஒரு வளைந்த கோலைக் கொண்டோ அல்லது பண்ணையில் இருக்கின்ற ஒரு கருவியை மட்டையாக பயன்படுத்தி விளையாடினர்; மற்றும் முக்காலி, ஒரு மரத்ததண்டு, வாயிற்கதவு (எ.கா., விக்கெட் கேட்) ஆகியவற்றை விக்கேடாக பயன்படுத்தினர்.[2].
"கிரிக்கெட்" என்ற சொல்லுக்கு நிறைய மூலங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பழமை வாய்ந்த ஆட்ட வரலாற்றில் அதாவது 1598 ஆம் ஆண்டில் இந்த விளையாட்டு,(கீழே பார்க்கவும் ) கிரேக்கேட் என்று அழைக்கப்பட்டது. இடைக்கால டச் மொழியில் கிரிக் (-எ ), என்ற சொல் குச்சி என்ற பொருள் தரும்; மேலும் தொன்மை ஆங்கிலத்தில் கிரிக் அல்லது க்ரைசி ஊன்று கட்டை அல்லது கம்பு என்ற பொருளைத்தருகின்றது.[2]கிரிக்ஸ்டேல் என்ற இடைக்கால டச் சொல், நீண்ட குறைந்த உயர முக்காலிகளைக் குறிக்கிறது. இவை தேவாலயங்களில் முட்டிப்போட்டு வேண்ட உதவியாக இருந்தன. இந்த முக்காலியைப் போலவே இரண்டு தண்டுகள், விக்கெட் வீழ்த்த ஆரம்ப கிரிக்கெட்டில் உபயோகப்படுத்தப் பட்டது.
போன் பல்கலை கழகத்தை சேர்ந்த ஹெயனர் கில்மெய்ச்டார் என்ற மொழியியலாளர்,"கிரிக்கெட்" இடைகால டச் மொழி மெட் தே (க்ரிக் கேட்)சென் (அதாவது, "குச்சி துறத்தலை கொண்டு "), என்ற சொல்லை கொண்டு உருவானது என்று குறிப்பிடுகிறார். இது ஆட்டத்தில் உள்ள டச் தொடர்பை குறிக்கிறது. இன்னொரு வழியில் பார்க்கப்போனால் கவுண்டி ஆப் பிளான்டர்ஸ், டச்சி ஆப் பர்கண்டி உடன் வணிக தொடர்பு கொண்டிருந்த போது இடைக்கால டச் [3] சொற்கள் தென் கிழக்கு இங்கிலாந்துக்குள் ஊடுருவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.[4].
முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி, அமெரிக்கா மற்றும கனடாவுக்கும் இடையே 1844 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த போட்டி நியூயர்க்கில் உள்ள செயின்ட் ஜார்ஜ்ஸ் கிரிக்கெட் க்ளப்பில் நடந்தது.[11]
1859 ஆம் ஆண்டில் ஆங்கிலேய முன்னணி வீரர்களைக்கொண்ட குழு ஒன்று முதன் முதலில் வட அமேரிக்காவுக்கு கடல் தாண்டி சுற்றுபயணம் சென்றது. 1862 ஆம் வருடம் முதல் ஆங்கில அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டது.
1868 ஆம் ஆண்டில் மே மாதத்தில் துவங்கி அக்டோபர் வரை ஆஸ்திரேலிய அபார்ஜின்அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டது. இதுவே கடல் கடந்து போட்டியில் கலந்து கொண்ட முதல் ஆஸ்திரலிய அணியாகும்.
1877 ஆம் ஆண்டு ஆஸ்திரலியா சென்ற இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளை முழு ஆஸ்திரேலியன் XI க்கு எதிராக விளையாடியதி. இதை டெஸ்ட் போட்டியின் ஜனனம் என்று கருதலாம். இதற்கு அடுத்த ஆண்டே இங்கிலாந்தில் முதன் முறை சுற்று பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியர்கள் வெற்றி வாகை சூடி வீடு திரும்பினர். இந்த போட்டிகளில் டெஸ்ட் போட்டிகள் விளையாடப்படவில்லை என்றாலும், அதற்கு பின்னர் ஏராளமானவை விளையாடப்பட்டன. 1882 ஆம் ஆண்டில், தி ஓவலில், தி ஆஷேஸ் என்ற மிகப் பெரிய வரலாறு காணுகின்ற போட்டி உருவானது. உலகில் மூன்றாவது டெஸ்ட் விளையாடும் நாடாக தென்னாப்பிரிக்கா 1889 ஆம் ஆண்டில் உருவெடுத்தது.
போட்டியில் பங்கு பெறுபவர்கள் ஆகட்டும், அல்லது அதனை பார்வையிடுபவர்கள் ஆகட்டும் அல்லது அதனை படம் பிடித்து உலகிற்கு காட்டும் செய்தியாளர்கள் ஆகட்டும் கிரிக்கெட் என்றுமே இதனை அதிக அளவில் தான் பார்த்து வருகிறது.
ICC கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக முழு மூச்சாக இறங்கி உலகமெங்கும் மேலும் பல டெஸ்ட் போட்டி நாடுகள் உருவாக பல முயற்சிகள் எடுத்து வருகின்றது. இந்த வளர்ச்சிக்காக ஆப்பிரிக்க, ஆசிய மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளது ICC. 2004 ஆம் ஆண்டில் ICC சர்வதேச கோப்பை முதல் ரக கிரிக்கெட்டை முதன் முதலில் 12 நாடுகளுக்கு கொண்டுவந்தது.
ஜூன் 2001 இல் ICC "டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையை" அறிமுகப்படுத்தியது. மேலும் அக்டோபர் 2002 இல் இது "ஒரு நாள் சர்வதேச சாம்பியன்ஷிப் அட்டவணையையும் " அறிமுகப்படுத்தியது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்த இரு அட்டவணைகளில் முதல் இடத்தை வகித்து வருவது ஆஸ்திரேலியாதான்.
கிரிக்கெட் தற்போது கண்டிருக்கும் புதுமை Twenty20(ட்வென்டி ட்வென்டி)ஆகும், இது பெரும்பாலும் மாலைநேர பொழுதுபோக்காக ஆடப்படுகிறது. இந்த ஆட்ட முறை பெரும் அளவில் பார்வையாளர்களை ஆட்டகளத்திற்கும் தொலைக் காட்சியின் பக்கத்தில் இழுத்து வந்திருக்கிறது. ஆரம்ப ICC ட்வென்டி 20 உலக கோப்பைபோட்டி, 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதனை பின் தொடர்ந்து மற்றொரு போட்டி 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்தியாவில் ட்வென்டி20 லீக்கள் - அதிகாரபூர்வம் இல்லாத இந்தியன் கிரிக்கெட் லீக், 2007 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, அதிகாரபூர்வமான இந்தியன் பிரீமியர் லீக், 2008 இல் துவங்கப்பட்டது. இவற்றின் வருகை கிரிக்கெட்டின் வருங்காலத்தை பற்றி அலச பெரிதும் வழிவகுத்தன.[12][13][14][15]